பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள்

Added : பிப் 12, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது.
கலெக்டர் கிரண் குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வரும் 19, 20, 21 தேதிகளில் ஏ.கே.டி., கல்விக்குழுமத்தில் நடத்தப்பட உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளாக, வரும் 19ம் தேதி கபடி, வாலிபால், ஹாக்கி, கூடைப்பந்து, இறகுப்பந்து போட்டிகளும், 20ம் தேதி நீச்சல், ஜூடோ, குத்துச்சண்டையும், 21ம் தேதி 100, 200, 400 மீ., தடகள போட்டிகள், 1.5 கி.மீ., தடை தாண்டுதல், சங்கிலி, குண்டு, ஈட்டி எறிதலும், கோல் ஊன்றி தாவுதல், நீளம் தாண்டுதல் போட்டிகளும் நடத்தப்படுகிறது.போட்டிகளில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள், அதாவது 1.1.1995 அன்றோ அல்லது அதற்குப்பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியான www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் வரும் 18ம் தேதி மாலை 5:00 மணிக்குள் ஆன்லைனில் பதிவு செய்பவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஆன்லைனில் பதியாதவர்கள் கண்டிப்பாக போட்டிகளில் பங்கேற்க முடியாது.குழு மற்றும் தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெறும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் முதல் பரிசாக 1,000 ரூபாய், இரண்டாம் பரிசாக 750, மூன்றாம் பரிசாக 500 ரூபாய்க்கான காசோலையாக வழங்கப்படும். இப்போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.போட்டிகளில் பங்கேற்பவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிப்பதற்கான ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பிறந்த தேதிக்கான சான்று, கல்வி நிறுவன அடையாள அட்டை, ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவைகளின் நகல்களை போட்டி நடப்பதற்கு முன் போட்டி நடத்துபவர்களிடம் அளிக்க வேண்டும்.போட்டிகள் சரியாக காலை 9:00 மணிக்கு துவங்கும். தாமதமாக வருபவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இதுகுறித்து மேலும் விபரங்கள் பெற விழுப்புரம்மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 99435 09394, 86757 73551, 74017 03485 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X