பொது செய்தி

தமிழ்நாடு

விலை வீழ்ச்சியால் மார்க்கெட் கமிட்டிக்கு உளுந்து வரத்து 'டல்'

Added : பிப் 12, 2020
Advertisement
 விலை வீழ்ச்சியால் மார்க்கெட் கமிட்டிக்கு உளுந்து வரத்து 'டல்'

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் விலை வீழ்ச்சி மற்றும் சாக்கு மாற்றும் பிரச்னையால் உளுந்து வரத்து மிகவும் குறைந்தது.
உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் விவசாய பொருட்களுக்கு விலை மிகவும் குறைவான அளவில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கமிட்டிக்கு வரும் விவசாய பொருட்களின் மூட்டை களை சாக்கு மாற்ற போதிய அளவில் தொழிலாளர்கள் இல்லை.இதனால், விவசாய பொருட்கள் விலை நிர்ணயம் செய்வதிலும், விவசாயிகள் வீட்டிற்கு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. சில நேரங்களில் நாள் கணக்கில் விவசாயிகள் மார்க்கெட் கமிட்டியிலேயே இரவும், பகலும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.கடந்த வாரம் சாக்கு மாற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் விவசாய பொருட்கள் எடை போடுவதிலும், விலை நிர்ணயம் செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் மார்க்கெட் கமிட்டிக்கு மூன்று நாட்கள் விவசாயப் பொருட்களை எடுத்து வரவேண்டாம் என மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் உளுந்து மூட்டை 10 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து உளுந்து வரத்து அதிகரித்ததால் உளுந்து மூட்டை 6,100 ரூபாய், 6,200 ரூபாய் என விலை குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதனால் நேற்று மார்க்கெட் கமிட்டிக்கு உளுந்து வரத்து மிகவும் குறைந்தது. 2,000 மூட்டைகள் உளுந்து வரத்து வந்த நிலையில், நேற்று வெறும் 190 மூட்டைகள் மட்டுமே மார்க்கெட் கமிட்டிக்கு உளுந்து வந்திருந்தது.அதேபோல் நெல் மூட்டை 1,400 ரூபாய்க்கு நிர்ணயம் செய்யப்பட்டு வந்த நிலையில் 1,200 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இவ்வாறு விவசாய பொருட்களுக்கு மார்க்கெட் கமிட்டிகளில் விலை குறைந்து வருவதால் விவசாயிகள் செய்வது அறியாமல் உள்ளனர். மழை மற்றும் பனிப்பொழிவுகளால் உளுந்து விளைச்சல் குறைந்து வந்த நிலையில், உளுந்துக்கான விலை குறைந்து வருவது விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X