சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பு: போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்

Added : பிப் 12, 2020
Advertisement
 கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பு: போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்

அவலுார்பேட்டை:அவலுார்பேட்டையில் கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள், வீடுகள் அகற்றப்பட்டன.
அவலுார்பேட்டையில் முத்துவிநாயகர் கோவிலுக்கு சொந்தமான பழைய சந்தை மேட்டு பகுதியில் தற்காலிகமாக கடை மற்றும் வீடுகள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பில் இருந்தன. மேலும் சிலர் மணல் உள்ளிட்டவைகளையும் அங்கு கொட்டி வைத்திருந்தனர்.ஆக்கிரமிப்புகளை அகற்ற கோவில் நிர்வாகத்தின் சார்பில் 6 மாதங்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், ஒருவரும் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளவில்லை.இந்நிலையில், நேற்று காலை இந்து சமய அறநிலையதுறை செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் அன்பழகன் முன்னிலையில், ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.இதே பகுதியில் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் 72 பேர் வீடு மற்றும் கடைகளை கட்டியிருந்தனர். இது தொடர்பாக விழுப்புரம் அறநிலைய துறை இணை ஆணையாளர் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இப்பகுதியில் வாகனங்கள் வராமல் தடுப்பதற்காக காலியாக உள்ள இடத்தைச் சுற்றிலும் கால்வாய் போல் பள்ளம் எடுக்கப்பட்டது. அவலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், தனிப்பிரிவு ஏட்டு ராமலிங்கம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.வருவாய் ஆய்வாளர் பூங்காவனம், வி.ஏ.ஓ., பாலசுப்ரமணி, மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் பணியாளர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X