சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கொடுமையால் மகள் சாவு: போலீசில் தாய் புகார்

Added : பிப் 12, 2020
Advertisement

திருக்கோவிலுார்;திருக்கோவிலுார் அருகே வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்தியதில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
திருக்கோவிலுார் அடுத்த ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மனைவி ஜெயப்பிரியா, 29; திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு வயதில் ஜீவநதி என்ற மகன் உள்ளார். கணவர் மற்றும் மாமனார் மாமியாருடன் சென்னையில் தங்கி இருந்தனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி ஜெயப்பிரியா அவரது தாய் வீடான ஆற்காடு கிராமத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அவரது தாய் செல்வி, 52; கொடுத்த புகாரில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஜெயப்பிரியா சில நாட்களுக்கு முன் ஆற்காடு கிராமத்திற்கு வந்தார்.குழந்தையைப் பார்க்க வேண்டும் வீட்டிற்கு அழைத்து வரும்படி ஜெயப்பிரியா கூறியும் கணவர் சண்முகம் குழந்தையை அழைத்து வரவில்லை. மேலும், மாமனார் பிச்சைக்காரன், மாமியார் வசந்தா உறவினர்கள் நான்கு பேர் மொபைல் போனில் கோபத்தை துாண்டும் வகையில் பேசியுள்ளனர்.இதனால், மனமுடைந்த ஜெயப்பிரியா 10ம் தேதி அதிகாலை 12:30 மணி அளவில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்துள்ளார். அதன்பேரில், அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X