சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு குடும்பத்தினரிடையே தகராறு: ஒருவர் கைது

Added : பிப் 12, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து ஒருவரை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காட்டுகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் நுார்முகமது, 43; இவரது சகோதரர் முகமது இஸ்மாயில், 30; இவர்களுக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. பாகபிரிவினை செய்யாமல், சரிசமமாக பிரித்து இருவரும் பயிர் செய்து வருகின்றனர். பொது கிணற்றின் மூலம் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.இந்நிலையில், பொது கிணற்றின் மோட்டார் பம்ப் பழுதானதையடுத்து, அதற்கான பங்கு தொகையாக 4,000 ரூபாயை முகமது இஸ்மாயில் கேட்டுள்ளார். இதனால், தகராறு ஏற்பட்டு இரு குடும்பத்தினரும் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் முகமதுஇஸ்மாயில், லால்பீ, நுார்ஜகான் மீதும், மற்றொரு தரப்பில் நுார்முகமது, ரசூல்பீ, மாயகிருஷ்ணன், நாதிபுனிஷா உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிந்து, முகமது இஸ்மாயிலை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X