பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் கதை கருக்களை தேடி அலைய வேண்டாம் சாகித்ய அகாடமி விருது பெற்ற தர்மன் பேச்சு

Added : பிப் 12, 2020
Advertisement
 மாணவர்கள் கதை கருக்களை தேடி அலைய வேண்டாம் சாகித்ய அகாடமி விருது பெற்ற தர்மன் பேச்சு

ராமநாதபுரம்:மாணவர்கள் கதை கருக்களை தேடி அலைய வேண்டாம், என சாகித்ய அகாடமி விருது பெற்றஎழுத்தாளர் தர்மன் பேசினார்.

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லுாரி தமிழ்த்துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.முதல்வர் மகுதம்மாள் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் துரைப்பாண்டியன் வரவேற்றார்.தமிழ்த்துறை தலைவர் செந்தாமரை முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் அதிசயம் அறிமுக உரையாற்றினார்.

''சூல் நாவலில் மையமும் விளிம்பும்'' என்ற தலைப்பில் தஞ்சை தமிழ் பல்கலை இணைப்பேராசிரியர் வெங்கடேசன் பேசினார். ''இலக்கியமும் படைப்பாற்றலும்'' என்ற தலைப்பில் சாகித்யஅகாடமி விருது பெற்ற சோ.தர்மன் பேசியதாவது:
கிராமப்புற மக்களிடையே அற உணர்வு அதிகமாக இருந்தது. இன்று அது இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. படைப்பாளர்களாக வேண்டுமெனில் நுால்களை வாசிக்க வேண்டும். பட்டப்பெயர்களுக்கு வரலாறு உண்டு. அதனை சாதாரணமாககடந்து போக முடியாது. பட்டப் பெயர்கள் கூறி அழைத்தால் அதற்கான காரணம் என்னஎன்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதில் அருமையான கதைகள் இருக்கும்.மாணவர்கள் கதை கருக்களை தேடி அலைய வேண்டியதில்லை.

கதைகள் நம்மை தேடி வரும். அதனைநாம் பார்க்கும் விதத்தின் மூலம் கதைகளாக்க முடியும். வனக்குமார் கதை எழுதினேன். அதில்25 ஆண்டு களில் காட்டில் பதுங்கி வாழும் மனிதன் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் குறித்து எழுதினேன். இதை எழுதியதற்காக போலீசார் வீரப்பனுக்கும் உனக்கும் என்ன தொடர்பு என கேட்டுவிசாரித்தனர்.

இரு கிளிகளை வைத்து கதை எழுதினேன். அதில் வனங்கள் அழிக்கப்பட்டதையும்,மனிதர்கள் தங்களது சுயம் இழந்ததையும், தங்கள் மொழியை இழந்ததையும் சுட்டிக்காட்டி இருந்தேன். காஷ்மீர்- கன்னியாகுமரி நெடுஞ்சாலை அமைக்க ஒரு லட்சத்து 5 ஆயிரம் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. இயற்கையை பற்றி பேச நமக்கு என்ன அருகதையுள்ளது.வெளி நாடுகளில் இயற்கையை மதிக்கின்றனர். எடுத்துக்காட்டு, ஜோகன்ஸ்பர்க் நகரில் கிரிக்கெட் மைதானம் நடுவில் இருக்கும் மரத்தை அந்த அரசு வெட்ட மறுத்து விட்டது.

கிரிக்கெட் விதிமுறைகளை மாற்றிக்கொள்ளுங்கள் என தெரிவித்து விட்டது. இன்று நாம் மேற்கத்திய கலாசாரங்களை பின்பற்றிவருகிறோம்.இன்றைக்கு மாணவர்கள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. முயற்சியேஎடுக்காமல் எப்படி சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். உதவி பேராசிரியர் அர்ச்சுனன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X