சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெங்களூருவில் இருந்து மது பாட்டில் கடத்தியவர் கைது

Added : பிப் 12, 2020
Share
Advertisement
 பெங்களூருவில் இருந்து மது பாட்டில் கடத்தியவர் கைது

அவலுார்பேட்டை:அவலுார்பேட்டை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 1.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவலுார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எதுவாய்ப்பேட்டை பகுதியில் பெங்களூருவிலிருந்து மது பாட்டில்கள் கொண்டு வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், தனிப்பிரிவு ஏட்டு ராமலிங்கம் மற்றும் போலீசார் எதுவாய்ப்பேட்டை பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று காலையில் அந்த கிராமத்திற்கு வந்த காரை சோதனை செய்ததில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில் எதுவாய்ப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏசுபாதம் என்கிற அண்ணாதுரை, 54; இவர், பெங்களூருவிலிருந்து எதுவாய்ப்பேட்டைக்கு 2076 பிராந்தி பாட்டல்களை கடத்தி வந்த சேத்பட், எய்யில் உள்ளிட்ட பகுதிகளில் விற்க திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது. அவலுார்பேட்டை போலீசார் ஏசுபாதத்தை கைது செய்து, கார் மற்றும் மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X