போலீஸ் நிலையம் முன் மறியல்: 11 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் நிலையம் முன் மறியல்: 11 பேர் கைது

Added : பிப் 12, 2020
Share

செஞ்சி;தற்கொலைக்குத் துாண்டிய பெண்ணை கைது செய்ய வலியுறுத்தி சத்தியமங்கலம் போலீஸ் நிலையம் முன் மறியலில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி அடுத்த வி.நயம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயரங்கன் மகன் பெருமாள், 28; இவர், சிங்கப்பூரில் வேலை செய்து விட்டு, 6 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தவர் கடந்த 6ம் தேதி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்த புகாரின் பேரில் தற்கொலைக்கு துாண்டியதாக அதே ஊரைச் சேர்ந்த திருமலை மனைவி கன்னியம்மாள், 39; அவரது மகன் சூர்யா, 21; மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்தினர்.இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் கடந்த 9ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். நேற்று இதே காரணத்திற்காக பா.ம.க., மாவட்ட துணைச் செயலர் ஜெயக்குமார் மற்றும் 5 பெண்கள் உட்பட 11 பேர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடன், மறியல் செய்த 11 பேரையும் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X