சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் விபத்தில் வாலிபர் பலி

Added : பிப் 12, 2020
Share
Advertisement

திருவெண்ணெய்நல்லுார்;திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக் விபத்தில் வாலிபர் இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் வினாயகமுர்த்தி, 24; தனியார் பைக் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பைக்கில் விட்டிற்குச் சென்றார்.பேரங்கியூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, இவருக்கு பின்னால் வந்த மற்றொரு பைக் வினாயகமூர்த்தியின் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த வினாயகமூர்த்தியை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X