சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்னி பஸ்கள் மோதல்: 7 பேர் படுகாயம்

Added : பிப் 12, 2020
Advertisement
 ஆம்னி பஸ்கள் மோதல்: 7 பேர் படுகாயம்

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே ஆம்னி பஸ்கள் மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
துாத்துக்குடி அடுத்த உடன்குடி பகுதியில் இருந்து 31 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு விவேகம் என்ற ஆம்னி பஸ் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை துாத்துக்குடி அடுத்த அரசகுடியைச் சேர்ந்த சூரன், 47; என்பவர் ஓட்டினார்.நேற்று அதிகாலை 4:00 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே வந்தபோது, சென்னையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற சாய்ராம் என்ற ஆம்னி பஸ் சாலை சந்திப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை கவனிக்காமல் திரும்பியபோது துாத்துக்குடியில் இருந்து வந்த பஸ்சின் பக்கவாட்டில் மோதியது.இதில் இரு பஸ்களிலும் பயணம் செய்த சேலம், அம்மாபேட்டை சங்கர், 45; சென்னை சுப்ரமணி, 63; டிரைவர் சூரன் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதித்தது.தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வாகனங்களை உளுந்துார்பேட்டை ரயில்வே ஜங்ஷன் வழியாக மாற்றி போக்குவரத்தை சரி செய்ததுடன், விபத்துக்குள்ளான வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர்.விபத்து குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X