பொது செய்தி

தமிழ்நாடு

மயிலம் பொறியியல் கல்லுாரி தொழில்நுட்ப கருத்தரங்கம்

Added : பிப் 12, 2020
Advertisement
 மயிலம் பொறியியல் கல்லுாரி தொழில்நுட்ப கருத்தரங்கம்

விழுப்புரம்:மயிலம் பொறியியல் கல்லுாரியில் அனைத்து துறை மாணவர்கள் பங்கேற்ற மெக்பீஸ்ட் 2020 தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்க திருவிழா துவக்க நிகழ்ச்சிக்கு, மயிலம் பொறியியல் கல்லுாரி தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாறன் எம்.எல்.ஏ., செயலர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில் வரவேற்றார். டீன் ராஜப்பன் வாழ்த்திப் பேசினார்.கல்லுாரி முன்னாள் மாணவர் மற்றும் ேஹாண்டாய் குழுமத்தின் மனிதவள மேம்பாட்டு துறை தேசிய நிர்வாக அதிகாரி முரளிதரன், மாணவர்கள் தங்கள் வாழ்வில் எவ்வாறு முன்னேறுவது பற்றியும், நவீனகால தொழில்நுட்ப வளர்ச்சி, அதன் அவசியம் பற்றி சிறப்புரையாற்றினார்.கருத்தரங்கில், அனைத்து துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனித்தனியே தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சாராத போட்டிகள் நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று போட்டிகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை, மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், சீனுவாசன் ஆகியோர் செய்திருந்தனர். மின்னியல் மற்றும் மின்ணணுவியல் துறை பேராசிரியர் பிரேம் சுந்தர் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X