தமிழ்நாடு

எப்போது: தீர்த்த யாத்திரை சாலையை சீரமைப்பது: ராமேஸ்வரத்தில் போக்குவரத்து நெரிசல்

Added : பிப் 12, 2020
Advertisement
எப்போது: தீர்த்த யாத்திரை  சாலையை சீரமைப்பது: ராமேஸ்வரத்தில்  போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம்:ராமேஸ்வரத்தில் வாகன போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பாரம்பரிய தீர்த்த யாத்திரைசாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

ராமேஸ்வரத்தில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. விழாக் காலங்களில் அதிகளவு வாகனங்கள் வருகின்றன. இதனால் நகர்முழுவதும் மக்கள் போக்குவரத்து நெரிசலில் தவிக்கின்றனர். கோயில் ரத வீதிகளில் வரவாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் முதியவர்கள் கோயிலுக்கு செல்வதில் சிரமப்படுகின்றனர். வாகனங்களை நிறுத்துவதற்கு இடமின்றிவாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.

அக்னி தீர்த்தம் முதல் கடல் சார் வாரிய அலுவலகம் வரை மண் மூடப்பட்ட சாலையை ஆக்கிரமித்தும், கடல் வரை கட்டடம் கட்டியும், தங்கும் விடுதிகளின் கழிவு நீரை கடலில் கலக்க செய்து மாசுபடுத்து கின்றனர்.ஆக்கிரமிப்புகளை அகற்றி பாரம்பரியதீர்த்த யாத்திரை சாலையை சீரமைத்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து போக்குவரத்து நெருக்கடியை குறைக்க வேண்டும்.

இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் எஸ்.பிரபாகரன் கூறியதாவது:பசுமை ராமேஸ்வரம் திட்டத்தில் பாரம்பரிய தீர்த்த யாத்திரை சாலையை சீரமைத்து போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் தீர்த்த பாட்டில்களுடன் புகார் மனு அளித்துள்ளோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X