சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி அடித்து கொலை மூவர் கைது

Added : பிப் 12, 2020
Advertisement

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராதானூர் ஏந்தல்கரை காலனியை சேர்ந்தவர் கருப்பையா 50. விவசாயியான இவர் தனது மகளுடன் கதிர் அறுவடை செய்த வயலில் வைக்கோலில் தீ வைத்துள்ளார்.

இவரது வயலில் வைக்கப்பட்ட தீ அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் வயலில் உள்ள வைக்கோலில் பற்றி எரிந்தது.இது குறித்து இரு குடும்பத்தினர் இடையே இரவில் தகராறு ஏற்பட்டது. இதில் விவசாயி கருப்பையாவை சண்முகம் கையால் தாக்கியதில் மயங்கி விழுந்த கருப்பையா அதே இடத்தில் இறந்தார். கருப்பையா மனைவி சாந்தி புகாரில், ஏந்தல்கரையை சேர்ந்த சண்முகம் 46, அவரது தந்தை கருப்பையா 65, தாய் வள்ளி 60, ஆகியோர் மீது ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர்.

*கருப்பையா உடல் திருவாடானை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்தது. கருப்பையா குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது மகளுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பையா உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர்.மாவட்ட எஸ்.பி., ராஜராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கூறி அனைவரையும் சமரசம் செய்தார்.அதனை தொடர்ந்து உடல் ஏந்தல்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X