பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் ஆதியோகி சிவன் ரதம் வருகை

Added : பிப் 12, 2020
Advertisement
 பரமக்குடியில் ஆதியோகி சிவன் ரதம் வருகை

பரமக்குடி:மகா சிவராத்திரி விழாவையொட்டி வெள்ளையங்கிரி ஈஷா யோகா மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் பரமக்குடிக்கு வந்தது.

பிப்.21ல் மகா சிவராத்திரி விழாவை வரவேற்கும் விதமாக ஜன.1ல் கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து ஆதியோகி ரதம் புறப்பட்டது. இந்த ரதம் நேற்று பரமக்குடி வந்தது. இங்குள்ள மணி நகரில் முன்னாள் தாசில்தார் பரமசிவம் வரவேற்றார். பின், ஒட்டப்பாலம் வழியாக ரதம் சென்றதும் முத்தாலம்மன் கோவில் முன்பு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

அங்கு ஆயிர வைசிய சபை தலைவர் போஸ், முத்தாலம்மன் கோயில் டிரஸ்ட்டிகள் பாலசுப்ரமணியன், ரவீந்திரன் உள்ளிட்டோர் சிறப்பு வழிபாடு நடத்தினர். பெரிய பஜார், காந்தி சிலை ஆர்ச் வழியாக, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்றது. அப்போது ஏராளமான பொதுமக்கள் ஆதியோகி சிவனை வழிபட்டனர்.ரதம் ராமேஸ்வரம் வரை சென்று மீண்டும் பிப்.18ல் வெள்ளியங்கிரி ஈஷா யோக மையம் சென்றடைகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X