பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் காளைக்கு அஞ்சலி

Added : பிப் 12, 2020
Advertisement

திருவாடானை:திருவாடானை அருகே பண்ணவயல் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோயிலுக்கு அதே கிராமத்தை சேர்ந்த அங்காள பரமேஸ்வரி 25, என்பவர் நேர்த்தி கடனுக்காக காளை மாடு வளர்த்து வந்தார்.

காளையை அக்கிராம மக்கள் பாசத்துடன் வளர்த்தனர். 25 ஆண்டு களுக்கு மேலாக பண்ண வயலை வலம் வந்த அக்காளையை நோய் தாக்கியது. கிராம மக்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் பலனில்லாமல் நேற்று இறந்தது. திருவாடானை ஊராட்சி தலைவர் இலக்கியா உட்பட ஏராளமானோர் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின் முனீஸ்வரர் கோயில் அருகே மாடு அடக்கம் செய்யப்பட்டது. விரைவில் கோயில் கட்ட இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X