சேதமடைந்த தொண்டி கடற்கரை சாலை

Added : பிப் 12, 2020
Advertisement

திருவாடானை:தொண்டி கடற்கரை சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொண்டி பஸ்ஸ்டாண்டில் இருந்து கடற்கரை வழியாக பயணியர் விடுதி வரை செல்லும் சாலை சேதம் அடைந்துள்ளது. இச்சாலையில் மீன் ஏற்றுவதற்காக வாகனங்கள் அடிக்கடி செல்வதால் அதிகமான போக்குவரத்து நெரிசல் காணப்படும்.இது குறித்து மகாசக்திபுரம் பகுதி மக்கள் கூறியதாவது: சாலையில் அதிகமான வேகத்தடைகள் உள்ளன. இரவில் டூவீலர்களில் செல்பவர்கள்பாதிக்கப்படுகின்றனர்.சில இடங்களில் சாலையை மணல் மூடியிருப்பதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கடற்கரை புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது.அக்கட்டட சுவர்கள் இதுவரை அகற்றப்படவில்லை. மாலை நேரங்களில் சிறுவர்கள்விளையாட முடியாமல் தவிக்கின்றனர். கடற்கரை சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X