கல்வியியல் கல்லுாரிகள் பங்கேற்ற மாவட்ட போட்டி

Added : பிப் 12, 2020
Advertisement
 கல்வியியல் கல்லுாரிகள் பங்கேற்ற மாவட்ட போட்டி

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் கல்வியியல் கல்லுாரிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான விளையாட்டு, கலைப் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

இதில் 8 கல்லுாரிகளை சேர்ந்த 175 மாணவர்கள் பங்கேற்றனர். 100, 200, 400, 800 மீ., ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், ஈட்டி, குண்டு எறிதல் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரியில் நடந்தது. முகமது சதக் அறக்கட்டளை தலைவர் முகமது யூசுப் தலைமை வகித்தார்.

முதல்வர் சோமசுந்தரம் வரவேற்றார். தமிழ்நாடு கல்வியியல் பல்கலை பிரதிநிதி பேராசிரியர் ஜார்ஜ் ஸ்டீபன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். உடற்கல்வி இயக்குநர் வடிவேல் நன்றி கூறினார். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மதுரையில் நடக்கும் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்கதகுதி பெற்றனர்.ஏற்பாடுகளை முகமது சதக் கல்வியியல் கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X