பொது செய்தி

தமிழ்நாடு

ஏழுமலை பாலிடெக்னிக்கில் மாணவர்கள் புலத்திறன் போட்டி

Added : பிப் 12, 2020
Advertisement
 ஏழுமலை பாலிடெக்னிக்கில் மாணவர்கள் புலத்திறன் போட்டி

விழுப்புரம்:விழுப்புரம், ஏழுமலை தொழில்நுட்ப கல்லுாரி முன்னாள் மாணவர் அன்பரசன் நினைவாக, தொழில்நுட்பம் சார்ந்த புலத்திறன் வெளிப்படுத்தும் போட்டி நடந்தது.
ஏழுமலை தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்த போட்டியில், மணக்குள விநாயகர், அன்னை வேளாங்கண்ணி, ராஜாதேசிங்கு மற்றும் காமராஜர் பாலிடெக்னிக், ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரிகளில் இருந்து 120 மாணவர்கள் பங்கேற்றனர்.இதில், தங்களின் புலத்திறமையை வெளிப்படுத்திய முதல் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்த மாணவர்களுக்கு, முன்னாள் மாணவர் அன்பரசன் நினைவு பரிசு 25 ஆயிரம் ரூபாய்க்கான பரிசு, சான்றிதழ் மற்றும் கோப்பைகளை, பாலிடெக்னிக் செயலர் செல்வமணி வழங்கினார். பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை, மாணவர் அன்பரசன் சகோதரர் அழகரசன் கல்லுாரியோடு ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தார். கல்லுாரி முதல்வர் அகோரம் வரவேற்றார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி கூடுதல் தலைமை பொறியாளர் பவித்ரன் சிறப்புரையாற்றினார். அழகரசன் விழா மலரை பெற்று கொண்டார். இயக்குநர் செந்தில்குமார் வாழ்த்திப்பேசினார். துணை முதல்வர், துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X