பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் உப கோயிலுக்கு பாலாலயம் தினமலர் செய்தி எதிரொலி

Added : பிப் 12, 2020
Advertisement

ராமேஸ்வரம்:தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலின் உபகோயிலான நாகநாதர் கோயிலில் பாலாலயம் நடத்த இந்து சமய அறநிலையத் துறை முன் வந்துள்ளது.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலின் உபகோயிலான பழமையான நாகநாதர் சுவாமி-சவுந்தரியவள்ளி அம்மன் கோயிலில் சேதுபதி மன்னர்கள் முதலில் தரிசித்த பிறகு, ராமநாத சுவாமி கோயிலுக்குள் செல்வார்கள்.கடந்த 10 ஆண்டுகளாக இக்கோயிலில் பூஜை, அபிேஷகம், பராமரிப்பு இன்றி கோயிலை சுற்றிலும் முள்புதர் வளர்ந்து விஷ ஜந்துகளின் புகலிடமாக மாறியது.கோயில் கோபுரம் வர்ணம் இன்றி பொலிவிழந்தது.

மேலும், இரவில் கோயில் அருகில் சமூக விரோதிகள் மது அருந்தி ரகளை செய்வது குறித்து ஜன.22ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் இக்கோயிலை ஆய்வு செய்து கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி பிப்.7ல் இக்கோயிலில் பாலாலயம் பூஜை நடத்தினர். இதை தொடர்ந்து திருப்பணிகளை துவக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X