பொது செய்தி

தமிழ்நாடு

தாமதம்! நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில்...மாவட்டத்தில் பயனாளிகள் கடும் பாதிப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

திண்டிவனம்:விழுப்புரம் மாவட்டத்தில், நலிந்தோர் உதவித்திட்டம், ஈமச்சடங்கு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு நிதி ஒதுக்காமல் உள்ளதால், பயனாளிகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
தமிழக அரசு ஏழை மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதில், தமிழ்நாடு நலிந்தோர் குடும்ப நல உதவித்திட்டத்தின் கீழ், வீட்டில் உள்ள குடும்பத்தலைவர் இறந்து விட்டால், அவருடைய குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.இதேபோன்று, முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், உறுப்பினராக உள்ளவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகை, காசநோய், புற்றுநோய் மற்றும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.இதற்கடுத்து, மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டத்தின் கீழ், ஏழை பெண்களின் திருமணத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.மாவட்ட நிர்வாகம் சார்பில், நலத்திட்ட உதவிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய, அரசிடம் பரிந்துரை செய்யப்படும் நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. இதனால், திண்டிவனத்தில் தமிழ்நாடு நலிந்தோர் குடும்ப நல உதவித்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள 100க்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு கடந்த 2018 அக்டோபர் மாதத்திலிருந்தே நிவாரண உதவி வழங்கப்படாமல் உள்ளது.அதேபோன்று, உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக உள்ள குடும்பத்தலைவர் இறந்தால், அவர்களுக்கு வழங்க வேண்டிய ஈமச்சடங்கு உதவித்தொகை 22 ஆயிரத்து 500 ரூபாய் ஒரு ஆண்டிற்கு மேல் வழங்கப்படாமல் உள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் ஈமச்சடங்கு உதவித்தொகை, நலிந்தோர் குடும்ப நல உதவித்திட்டம் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக வழங்கப்படாமல் உள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், அரசின் பல்வேறு நிலத்திட்ட உதவிகள் கேட்டு, விண்ணப்பித்துள்ள பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிதி ஒதுக்கீடு, குறித்த காலத்தில் ஒதுக்கப்படாமல் உள்ளதால், விளிம்பு நிலையிலுள்ள பயனாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, 'மாவட்டத்தில் அரசின் நலிந்தோர் உதவித்திட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது. இதனால், கடந்த ஒரு ஆண்டாக வழங்கப்படவில்லை.தற்போதுதான், மாவட்ட நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு பகுதியிலிருந்தும், நிலுவையிலுள்ள அரசின் நிலத்திட்ட உதவி விண்ணப்பங்கள் பற்றிய பட்டியல் அனுப்புமாறு தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் நிலுவைய் உள்ள அரசின் நலத்திட்ட உதவிகள் விரைவில் வழங்கப்படும்' என்கின்றனர்.அரசின் உதவித் தொகை பயனாளிகளுக்கு தங்குதடையின்றி கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X