கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

Added : பிப் 12, 2020
Advertisement
 நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விழுப்புரம்;விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ்சை கோர்ட் ஊழியர்கள் விழுப்புரத்தில் ஜப்தி செய்தனர்.
விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் முகமது இப்ராகிம், 40; இவர் கடந்த 2014ம் ஆண்டு சேலம் கோட்ட அரசு பஸ் மோதியதில் இறந்தார். இது தொடர்பாக முகமது இப்ராகிம் குடும்பத்தினர், நஷ்ட ஈடு கேட்டு விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இவ்வழக்கில் முகமது இப்ராகிம் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் அரசு போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், நஷ்ட ஈடு வழங்கவில்லை.இதையடுத்து, கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வட்டியுடன் சேர்த்து 4 லட்சத்து 99 ஆயிரத்து 621 ரூபாய் அரசு போக்குவரத்துக் கழகம் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் வழங்க மாவட்ட நீதிபதி ஆனந்தி உத்தரவிட்டார்.இந்நிலையில், காலக்கெடு முடிந்தும் போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈடு தொகையை வழங்கவில்லை. இதனால், விழுப்புரம் பஸ் நிலையத்தில் இருந்து சேலம் புறப்பட்ட சேலம் கோட்ட அரசு பஸ்சை நேற்று கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X