அரசு மருத்துவமனை நோயாளிகளைதனியார் மருத்துவமனைக்கு அழைப்பு; வாட்ஸ்ஆப்பில் பெண்ணின் கண்ணீர் ஆடியோ| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனை நோயாளிகளைதனியார் மருத்துவமனைக்கு அழைப்பு; வாட்ஸ்ஆப்பில் பெண்ணின் கண்ணீர் ஆடியோ

Added : பிப் 12, 2020
Share

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு மருத்துவமனை எலும்பு முறிவு பிரிவில் அனுமதிக்கப்பட்ட வரை தனியார் மருத்துவமனைக்கு அழைப்பதாக பெண்ணின் கண்ணீர் ஆடியோ வைரலாக வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்பில் அந்த பெண் கூறியதாவது:ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு பிரிவில் அனுமதிக்கப்பட்ட கணவருக்கு சிகிச்சையளித்த அரசு டாக்டர் ஒருவர் எலும்பு பகுதியில் பிளேட் வைத்து சரி செய்யலாம், என்றார். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு வந்தால் சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும், என அழைத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தெரிய வந்தது. மற்றொரு அரசு டாக்டர் அறிவுரையால் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைக்காக காத்திருந்தோம். தனியார் மருத்துவமனைக்குஅழைத்த டாக்டர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது, வெளியே போய்மருத்துவம் பார்த்துக்கொள்ளுங்கள், என்கிறார்.

இது போன்று ஏழ்மை நிலையில் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு வரவில்லை என்பதற்காகஅறுவை சிகிச்சை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையின் நிலை இது தான், என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லுாரி டீன் அல்லி கூறியதாவது:பாதிக்கப்பட்டவருக்கு முதலாவது அறுவைசிகிச்சை முடிந்துள்ளது. இரண்டாவது அறுவை சிகிச்சைக்கு உடனடியாக காப்பீடு வழங்க மாட்டார்கள்.இரண்டாவது அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார். இது குறித்து அரசுக்கு தெரிவித்துள்ளோம்.கணவர் பாதிப்பில் இருப்பதால், அந்த பெண் வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார். சம்பந்தப்பட்டவருக்குஉரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X