சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்குகள் எரிந்து சேதம்

Added : பிப் 12, 2020
Advertisement
 வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்குகள் எரிந்து சேதம்

திருக்கோவிலுார்:திருக்கோவிலுாரில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக்குகள் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து சேதமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலுார், மந்தக்கரை வீதியில், ராஜேந்திரன் என்பவரின் வீட்டின் முன், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பைக் மற்றும் மொபட்டுகளை வரிசையாக நிறுத்தி வைத்திருந்தனர். நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பைக்குகள் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடன் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர்.இதில் அப்பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் வினோத்குமார். 34; சேகர் மகன் கார்த்தி, 27; வெங்கடேஷ் மகன் சிவா, 24; சுப்பராயன் மகன் ஏழுமலை, 35; கணேசன் மகன் சேட்டு, 47; ஆகியோரின் இருசக்கர வாகனங்கள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.தகவலறிந்த திருக்கோவிலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப் பதிந்து பைக்குகள் எப்படி தீ பிடித்து எரிந்தது, யாரேனும் தீ வைத்து எரித்தார்களா என விசாரித்து வருகின்றனர்.நள்ளிரவு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த பைக்குகள் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X