பொது செய்தி

தமிழ்நாடு

கடைகளில் 583 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்ரூ.1.23 லட்சம் பறிமுதல்

Added : பிப் 12, 2020
Advertisement

ராமநாதபுரம்:ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து கலெக்டர் வீரராகவராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்டத்தில் 583 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு 1 லட்சத்து 23 ஆயிரத்து 850 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2019 முதல்தடை விதித்துள்ளது. நேற்று மாவட்டத்தில் 11 ஊராட்சிகள், ஏழு பேரூராட்சிகள், நான்கு நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

கலெக்டர் வீரராகவராவ் ராமநாதபுரம் ஒன்றியம் சக்கரக்கோட்டை, ராமநாதபுரம் நகராட்சி சேதுபதி நகர் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், பேக்கரிகள், சில்லரை விற்பனை கடைகள், உணவகங்கள், உள்ளிட்ட இடங்களில் நேரடியாக ஆய்வு செய்தார்.ஊராட்சி உதவி இயக்குநர் கேசவதாசன், நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன், ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ஸ்டெல்லா உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X