பிணவறை கட்டடங்களை புதியதாக கட்டலாமே | Dinamalar

பிணவறை கட்டடங்களை புதியதாக கட்டலாமே

Added : பிப் 12, 2020
Share

அருப்புக்கோட்டை, :விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சேதமடைந்த பிணவறை கட்டடங்களை புதியதாக நவீன வசதியுடன் கட்ட சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மாவட்டத்தில் ஒவ்வொரு ஊர்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் பிணவறை கட்டடப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் நடக்கும் விபத்து, விஷக்கடிகள், தற்கொலை, கொலை உட்பட சம்பவங்களில் பலியாகும் உடல்கள் இங்க வைக்கப்படும். போலீஸ் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை முடிந்த பின் சம்பந்தபட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும். இதற்கான கட்டடங்கள் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் ஒரு சில மருத்துவமனைகளில் உள்ள பிணவறை கட்டடம் இடியும் நிலையில் உள்ளது. உடல்களை பாதுகாக்கும் குளிரூட்டப்பட்ட வசதியும் பழுதாகி உள்ளது.அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கட்டடம் சேதமடைந்துள்ளது. மிக மோசமான நிலையில் உள்ளதால் உடல் பரிசோதனை செய்ய டாக்டர்களும் தயக்கம் காட்டுகின்றனர். மேற்கூரை இடிந்து விழும் நிலையிலும், கதவுகள் பெயர்ந்து பூட்ட முடியாத நிலையில் உள்ளது.மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சேதமடைந்தள்ள இக்கட்டடங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்டி பல ஆண்டாச்சுஅரசு மருத்துவமனைகளில் உள்ள இக்கட்டடங்கள் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் சேதமடைந்துள்ளன. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள இக்கட்டடம் மோசமான நிலையில் உள்ளது. உடன் இதை இடித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- டேனியல், தனியார் ஊழியர்,அருப்புக்கோட்டை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X