குழாய் இணைப்பு இருந்தும் குடிநீர் சப்ளை இல்லை: ரோட்டோரம் கசியும் நீரை சேகரிக்கும் அவலம்

Added : பிப் 12, 2020
Advertisement

கமுதி:கமுதி அருகே கிராமத்தில் காவிரி குடிநீர் குழாய் இணைப்பு இருந்தும், குடிநீர் சப்ளை இல்லாததால் 2 கி.மீ., சென்று சாயல்குடி ரோட்டோரங்களில் கசியும் தண்ணீரை சேகரித்து பயன்படுத்தும் அவலம் உள்ளது.

சாயல்குடி செல்லும் வழியில் பாம்புல்நாயக்கன்பட்டியில் 160 குடும்பங்கள் உள்ளது. இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக 2009ல் காவிரி குடிநீர் குழாய் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு நரிப்பையூர் கூட்டு குடிநீர் திட்ட தொட்டியில் குடிநீரை சேகரித்து பயன்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் சில மாதங்களில் கிராமத்திற்குள் உள்ள தொட்டிக்கு செல்லும் குழாயில் குடிநீர் சப்ளை துண்டிக்கபட்டது.

இதனால் குடிநீருக்காக கமுதி - சாயல்குடி ரோட்டோரத்தில் உள்ள குடிநீர் குழாயில் கசியும் தண்ணீரை சேகரிக்க 2 கி.மீ., தள்ளு வண்டிகளில் பயணித்து பல மணி நேரம் காத்திருந்து குடிநீர் சேகரிக்கும் கட்டாயத்திற்கு கிராம மக்கள் ஆளாகியுள்ளனர்.அதிகளவில் வாகனங்கள் இயக்கப்படும் கமுதி - சாயல்குடி ரோட்டோரத்தில் விபத்து அபாயத்தில் குடிநீர் சேகரிக்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X