பயன்பாடின்றி இருப்பதால் வாடிக்கையாளர்கள் தவிப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

முதுகுளத்துார்:முதுகுளத்துார் வழிவிடு முருகன் கோயில் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் அரசு ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கணக்கு வைத்துள்ளனர்.

வங்கி அருகில் உள்ள ஏ.டி.எம்.,ல் பணம் அனுப்பவும், பணம் எடுக்கவும், வங்கி புத்தகத்தை அச்சிடும் இயந்திரங்கள் உள்ளது.இங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். தற்போது கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பணம் அனுப்பும் இயந்திரம் பயன்பாடின்றி உள்ளது. அவசர நேரத்தில் பணம் அனுப்ப முடியாமல் வாடிக்கையாளர்கள் தவிக்கின்றனர். இதனால் கூடுதல் பணம் செலவு செய்து கடைக்கு அனுப்புகின்றனர்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X