ரோட்டின் நடுவே குவித்துள்ள ஜல்லி மாணவர்கள் அவதி

Added : பிப் 12, 2020
Advertisement
 ரோட்டின் நடுவே குவித்துள்ள ஜல்லி மாணவர்கள் அவதி

கமுதி:கமுதியில் பள்ளிக்கு செல்லும் ரோட்டின் நடுவே கட்டுமான பொருள்களை குவித்துள்ளதால் மாணவர்கள், பெற்றோர் அவதிப்படுகின்றனர்.

கமுதியில் செட்டியார் பஜார், மருதுபாண்டியர் சிலை வழியாக செல்லும் வடக்கு முதுகுளத்தூர் ரோடு உட்பட முக்கிய ரோடுகளின் நடுவே கட்டுமான பொருள்களை வாரக் கணக்கில் குவித்து வைக்கின்றனர். இதனால் அவ்வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், டூவீலர்களில் செல்வோர் விபத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அவ்வழியாக பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள் செல்லவும், ஏதிர் எதிரே வாகனங்கள் வரும் போது விலகி செல்ல முடியாததால் விபத்துக்கள் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, குறித்த நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. மேலும் வடக்கு முதுகுளத்தூர் ரோட்டில் தனியார் இரும்பு கடைகள், பழைய பொருள்கள் வாங்கும் கடை உரிமையாளர்கள் இரும்பு ஆணிகள், கம்பிகள், தகர சாமான்கள் உட்பட பொருள்களை ரோட்டை ஆக்கிரமித்து குவித்துள்ளனர்.

இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவர்களின் கால்களை இரும்பு கம்பிகள் பதம் பார்க்கின்றன. மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்லும் போது வாகனங்களின் டயர்கள் பஞ்சராகி நடுவழியில் நிற்பதால் பெற்றோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே ரோட்டை ஆக்கிரமித்து கட்டுமானப் பொருள்களை குவித்து வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X