பாதையின் நடுவிலே ஆக்கிரமிப்பு கண்டுக்காத நகராட்சி மீது அதிருப்தி விருதுநகர் மக்கள் கொதிப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

விருதுநகர்:விருதுநகரில் பாதையை ஆக்கிரமித்த கடையை நகராட்சி நிர்வாகம் அகற்றாது மற்ற இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்வதால் பொதுமக்கள் கொதிப்பில் உள்ளனர்.
விருதுநகர் அக்ரஹாரம் தெரு மற்றும் அதை சுற்றிய பகுதிகளில ஆக்கிரமிப்பு அகற்றம் பணி நடந்தது.

இதுபோல் வெயிலுகந்தம்மன் கோயில் எதிர்ப்புறம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. ஆனால் கோயிலின் எதிரே முக்கிய பாதையை மறித்து கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு கடையை மட்டும் அகற்றவில்லை.காரணம் கேட்ட போது, 'நகராட்சி அனுமதியோடு
அமைக்கப்பட்டதால் இதற்கு விதிவிலக்காம்,' என்றனர். ஆக்கிரமிப்பு அகற்றம் என்பது இங்கு ஒரு சாரா நடப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

யார் ஆக்கிரமித்தாலும் தவறு தான். அதிலும் மக்கள் சென்று வரும் பாதையை ஆக்கிரமித்து கடையை அமைக்க நகராட்சி நிர்வாகம் எப்படி அனுமதித்ததோ. இது போன்ற முறைகேடு செயல்களில் விருதுகர் நகராட்சி நிர்வாகம் அதிகளவில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக நகராட்சி நிர்வாகம் மீது மக்களிடையே அதிப்தியும் அதிகரித்து வருகிறது. இதன் மீது கலெக்டர்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நகரில்
ஆக்கிரமிப்பாளர்கள் அத்துமீறல் எல்லை மீற வாய்ப்புஉள்ளது.


பாரபட்சமின்றி செயல்படுங்க

சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது. ஆக்கிரமிப்பு அகற்றத்தை பாரபட்சம் இல்லாமல் நேர்மையாக செய்ய வேண்டும். ஒரு பகுதியில் அகற்றிவிட்டு மற்றொரு பகுதியில்
அகற்றாமல் இருப்பது பிற மக்களிடையே கொதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- காளிதாஸ், மாவட்ட

செயலாளர், ம.நீ.ம., விருதுநகர்.
கொடுமையிலும் கொடுமை

நகராட்சி நிர்வாகம் முறைகேடாக செயல்பட்டது தான் இப் பிரச்னைக்கு முக்கிய காரணம். ஆக்கிரமிப்பு அகற்றம் என்பது பொதுவானதாக இருக்க வேண்டும். பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதுதான் நகராட்சி நிர்வாகத்தின் பணி. ஆனால் நகராட்சி நிர்வாகமே ஆக்கிரமிப்பு செய்துள்ளது கொடுமையிலும் கொடுமை.
- தீபக்குமரன்,

தனியார் ஊழியர், விருதுநகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X