தீ வைப்பால் உருவாகுது தீங்கு

Added : பிப் 12, 2020
Advertisement

விபத்து ஏற்படுத்தும் மின்கம்பம்

அருப்புக்கோட்டை வேலாயுதபுரம் மகாலிங்கம் மூப்பனார் தெருவில் சேமடைந்த நிலையில் உள்ள மின்கம்பம் விழும் நிலையில் உள்ளது. பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.விபத்து முன் இதை அகற்ற மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சங்கரலிங்கம், அருப்புக்கோட்டை.

குடிநீர் குழாயில் உடைப்பு

ராஜபாளையம் பெரிய சாவடி பெரிய கடை பஜார் சந்திப்பில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. பொது மக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீர்உபயோகமின்றி செல்கிறது. இதன் அருகே மெயின் குழாயிலும் சேதம் ஏற்பட்டுதண்ணீர் வழிகிறது. விரைவில் சரி செய்ய வேண்டும்.

- -பீமராஜா, பெரிய கடை பஜார் தெரு, ராஜபாளையம்.-------

திறக்காத சுகாதார வளாகம்

சிவகாசி ஆயில்மில் காலனியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஒரு மாதமாக செயல்படவில்லை. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. சுகாதார வளாகம் செயல்படாததால் திறந்த வெளியினை பயன்படுத்துகின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார கேடும் ஏற்படுகிறது.

-ராமசாமி, சிவகாசி.
மின்கம்பத்தில் ஓட்டை

சிவகாசி ஆயில்மில் காலனியில் ரோட்டின் அருகில் அமைந்துள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் ஓட்டை விழுந்துள்ளது. சிறிய இணைப்பில் தாங்கி நிற்கிறது. பெரிய காற்றடித்தாலோ மழை பெய்தாலோ கீழே விழ வாய்ப்புள்ளது. மக்கள் நடமாடும் நேரம் விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது . புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

-சக்திவேல், சிவகாசி.

மோசமான ரோடு

சாத்துார் மாரியம்மன் கோயில் தெருவில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரிக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமென்ட் ரோடும் சேதமடைந்துள்ளது. விஜிலன்சில் வழக்கு நடப்பதாக கூறி நகராட்சி நிர்வாகம் பொறுப்பை தட்டிக்கழிக்கிறது. இப்பகுதியில் வசிப்பவர்கள் நடந்து செல்லக் கூட வழியின்றி தவிக்கும் நிலை உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய ரோடு போட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

-ஆறுமுகம், சாத்துார்
ரோட்டோர குப்பைக்கு தீ

சத்திரப்பட்டி ரோட்டில் ஆண்டாள் நகரில் இருந்து சங்கரபாண்டியபுரம் செல்லும் வழியின் பல பகுதிகளில் ரோட்டோரம் குப்பை குவித்து எரிக்கின்றனர். வாகனங்களில் செல்வோர் எதிரே வருபவர் தெரியாமல் விபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. அருகிலுள்ள மின் டிரான்ஸ்பார்மரும் சேதமடையும் நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- -முருகன், வேலாயுதபுரம்.-----
திறந்த நிலையில் கிணறு

சிவகாசி சித்துராஜபுரத்திலிருந்து கிச்சநாயக்கன்பட்டி செல்லும் ரோட்டின் ஓரத்தில் திறந்த நிலையில் கிணறு உள்ளது. அதிக போக்குவரத்து நிறைந்த ரோட்டில் திறந்த நிலை கிணறு இருப்பதால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கிணற்றின் அருகே தடுப்பு ஏற்படுத்த
வேண்டும்.

-சங்கர், சிவகாசி.

வாறுகாலில் தேங்கும் கழிவு நீர்

சிவகாசி முஸ்லிம் ஓடைத் தெருவில் உள்ள எந்த வாறுகாலும் துார்வாரப்படவில்லை. கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் ஒரே இடத்தில் தேங்கி விடுகிறது. துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார கேடும் ஏற்படுகிறது. கொசு உற்பத்தியாக இரவில் மட்டுமல்லாது பகலிலும் கடித்து துன்புறுத்துகிறது. மழைக் காலங்களில் கழிவுநீரோடு மழைநீரும் தெருவில் ஓடுவதோடு மட்டுமல்லாமல் வீட்டிற்குள்ளும் புகுந்து விடுகிறது.

- பக்ருதீன்,சிவகாசி

குவியல் குவியலாய் குப்பை

ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டின் தெற்கே பெண்கள் பள்ளி மற்றும் அரசுபள்ளிகளில் காம்பவுண்ட சுவர் அருகே குப்பை குவிக்கப்பட்டு வருகிறது. நீண்டநாட்களாகியும் அப்புறப்படுத்தவில்லை. மேலும் பல்வேறு இடங்களின் குப்பைகளும் இங்கு குவிகின்றன. இதில் சிலரால் தீ வைக்கப்பட்டு பாதிப்பும் ஏற்படுகிறது. பள்ளி அருகே உள்ளதால் குழந்தைகளுக்கு சுகாதார கேடுஅதிகமாகிறது. குப்பையை அகற்ற வேண்டும்.

- வேல்ராஜ், ராஜபாளையம்.------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X