சறுக்கி விடும் மணல் குவியல்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

Added : பிப் 12, 2020
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் கனரக
வாகனங்கள், சறுக்கி விடும் மணல் குவியல்கள், நடைபாதையை அடைத்து வைக்கபட்டுள்ள பேரிகார்டர்களால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளள்ளது.

நகரின் இந்திரா நகரிலிருந்து மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் வரை உள்ள தேசியநெடுஞ்சாலையில் அதிகளவுவாகனபோக்குவரத்து உள்ளது. நெடுஞ்சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் நிறுத்தபடுவது சைக்கிள்களில் செல்லும் மாணவர்கள்,
முதியவர்களை அச்சுறுத்துகிறது.

இந்திரா நகரிலிருந்து ராமகிருஷ்ணாபுரம் வரை உள்ள ஒர்க் ஷாப்புகள், பெட்ரோல் பங்க்
சார்ந்துள்ள ரோடுகளில் லாரி, டிராக்டர் போன்ற கனரக வாகனங்களை நிறுத்துவதால் இப்பகுதியில் அவ்வப்போது சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டு பலர் காயமடைகின்றனர்.காமராஜர் சிலையிலிருந்து மாரியம்மன்கோயில், உழவர்சந்தை, சர்ச்சந்திப்பு, திருப்பாற்கடல்,
ராஜபாளையம் ரோடுகளில் உள்ள மணல் குவியல்களால் டூவீலர் ஓட்டிகள் நிலைதடுமாறுகின்றனர்.

இந்திரா நகரில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள மண்ரோட்டை அடைத்து போலீசார் பேரிகார்டர்கள் வைத்திருப்பதால் நடந்து செல்பவர்களும் நடுரோட்டிற்கு வந்து தான்
செல்லவேண்டியுள்ளது. இததோடு அப்பகுதி வணிகநிறுவனங்கள் வருவோரும் ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துகின்றனர்.தேசிய நெடுஞ்சாலையில் நிலவும் இத்தகைய பிரச்னைகளால் காலை, மாலையில் டூவீலர்களில் பணிக்கு செல்பவர்கள் அச்சமடைந்துஉள்ளனர்.அரசுத்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு வழி காண வேண்டும்.


வாகனங்களை ஒழுங்குபடுத்துங்க
நகரின் மையப்பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்வதால் அதிக வாகனபோக்குவரத்து காணப்படுகிறது. இந்நிலையில் ரோட்டின் இருபுறமும் டிராக்டர்கள், லாரிகள் நிறுத்தி வைப்பது டூவீலர்களில் செல்பவர்களை அச்சபடுத்துகிறது. இதை போக்குவரத்து போலீசார் ஒழுங்கு
படுத்தவேண்டும்.

-மகாலிங்கம், ஸ்ரீவில்லிபுத்துார்.
நடைபாதையை ஏற்படுத்துங்க

போலீஸ் சார்பில்விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் ஒளிரும் தன்மையற்ற பேரிகார்டர்கள் வைத்திருப்பதே விபத்தை ஏற்படுத்தும்.மக்கள் நடந்து செல்லும் மண்பாதைகளையும் பேரிகார்டர் வைத்து அடைத்து வைத்திருப்பதால் நடந்து செல்பவர்கள் உயிரை பணயம் வைத்து தான் ரோட்டை கடக்கவேண்டியுள்ளது. இங்கு நடைபாதையை ஏற்படுத்தி
தரவேண்டும்.

- மாரிமுத்து, ஸ்ரீவில்லிபுத்துார்.


மணல்களை அகற்றுங்கள்

மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் தேசிய நெடுஞ்சாலையில் கிடக்கும் மணல்
குவியல்கள் மாணவர்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. சைக்கிளின் பின்புறம் ஸ்கூல்பேக்குடன் செல்லும்போது நிலை தடுமாறுகிறது. அவ்வப்போது மாணவர்கள் சறுக்கி
விழுகின்றனர். ரோட்டில் தேங்கும் மணல் குவியல்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை
நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-ரஞ்சித்குமார், ஸ்ரீவில்லிபுத்துார்.
தேவை சாலை விரிவாக்கம்

நகரில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்றபடாததால் ரோடுகள் சுருங்கி விட்டன.
இதனால் போக்குவரத்து நெருக்கடி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.நகருக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை விரிவு செய்து சென்டர்மீடியன் அமைக்கவேண்டும்.


-சீனிவாசன், ஸ்ரீவில்லிபுத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X