இரு முறை'டக்-அவுட்' ஆன காங்.,: பா.ஜ.,தோல்வியால் பெருமகிழ்ச்சி

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (55)
Advertisement
பா.ஜ., தோல்வி, காங்., பெருமகிழ்ச்சி, BjP, Congress

டில்லியில், 1998 முதல் 2013 வரை, 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, கடந்த தேர்தலை போல், இம்முறையும் 'டக் அவுட்' ஆகியுள்ளது. ஆனால், தங்கள் படுதோல்வியை பெரிதாக நினைக்காத காங்., தலைவர்கள், இரண்டாவது இடத்தில் உள்ளபா.ஜ.,வின் தோல்வியை நினைத்து, மகிழ்ந்து வருகின்றனர்.டில்லி சட்டசபைக்கு முதல் முறையாக, 1952ல் தேர்தல் நடந்தது.
அப்போது, காங்., 39 தொகுதிகளிலும், பாரதிய ஜனசங், ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. காங்., கட்சியின் சவுத்ரி பிரம் பிரகாஷ் முதல்வராக தேர்வானார். 1956ம் ஆண்டு சட்டசபை கலைக்கப்பட்டது.நீண்ட இடைவெளிக்குப்பின், 1993ம் ஆண்டு மீண்டும் சட்டசபை தேர்தல் நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., 49 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. மதன்லால் குரானா முதல்வரானார். காங்கிரஸ், 14 தொகுதிகளில் வென்றது.அதற்குப் பின், 1998, 2003, 2008 தேர்தல்களில், காங்கிரஸ் தொடர்ச்சியாக வென்று, டில்லி தனது கோட்டை என நிரூபித்தது.
1998ல் 52, 2003ல் 47, 200௮ல் 43 தொகுதிகளில் வென்று, ஷீலா தீட்சித் முதல்வர் ஆனார். உட்கட்சி பூசல், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரசுக்கு பலத்த அடி விழுந்தது.கடந்த 2013 தேர்தலில், பா.ஜ., 32, ஆம் ஆத்மி 28, காங்., 8 தொகுதிகளில் வென்றன. ஆனால், 2015, 2020 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. தொடர்ச்சியாக, இரு முறை அடி வாங்கியுள்ளதால், தலைநகர் அரசியலில், காங்., பூஜ்யமாக மாறியுள்ளது.பா.ஜ., - ஆம் ஆத்மி இடையேயான இருமுனை போட்டியில், காங்கிரஸ் காணாமல் போனது. 70 தொகுதிகளிலும் தோற்ற காங்., கட்சியில் பெரும்பாலான வேட்பாளர்கள் டெபாசிட் தொகையையும் இழந்தனர்.
ஆனால், காங்., தலைவர்கள், 'எங்களுக்கு இரு கண்கள் போனாலும் பரவாயில்லை; பா.ஜ.,வுக்கு ஒரு கண்ணாவது போய்விட வேண்டும்' என்பதில் குறியாக உள்ளனர்.தங்கள் படுதோல்வியை குறித்து சிறிதும் கவலைப்படாமல், 'பா.ஜ.,வால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை; அது போதும்' என காங்., தலைவர்கள், கொண்டாடி வருகின்றனர். காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம், ராஜஸ்தான் காங்., தலைவரும், துணை முதல்வருமான சச்சின் பைலட் ஆகியோர், ஆம் ஆத்மியின் வெற்றியைபுகழ்ந்து தள்ளியுள்ளனர்.




கட்சியை வழி நடத்த, தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆளுமையான தலைமை இல்லாதது, 'ஆம் ஆத்மி' கட்சியின் அபரிமிதமான வளர்ச்சி, மத்திய அரசு மற்றும் பா.ஜ.,வுக்கு எதிரான எதிர்ப்பலைகளை, ஒட்டுமொத்தமாக திரட்டி, ஓட்டுக்களாக கவர்ந்த கெஜ்ரிவாலின் பிரசார யுக்தி ஆகியவை காங்கிரஸின் பெரும் தோல்விக்கு காரணம். ஆனால், காங்கிரஸ் கட்சியினரோ, இதை உணர்ந்தவர்களாக இல்லை. -நமது நிருபர்-


Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
13-பிப்-202012:12:56 IST Report Abuse
Gopi அடுத்தவன் வாழ்ந்தா நாலு நாள் சாப்பிடாத கோஷ்டி காங்கிரஸ், அதிசயமா தங்களுடைய முதுகில் இருக்கும் அழுக்கை விட்டுட்டு அடுத்தவனை குறைசொல்லி அவனை தோக்கடிச்ச இன்னொருத்தன தூக்கிவெச்சு கொண்டாடுறது அவங்க ஆளுங்களுக்கே பிடிக்கலை . இப்படித்தான் காங்கிரஸ் காலத்தை ஓட்டணும்
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
12-பிப்-202019:43:27 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு அப்போ பார்லிமென்டில் 73 % வோட்டு வாங்கினீர்கள் மொத 10 MP தொகுதிகள் வெற்றி இப்போ என்ன ஆச்சு 10 MP மாதிரி 10 MLA கூட இல்லையே இதுதான் நீங்கள் சொன்ன வளர்ச்சியா இல்லை தளர்ச்சியா போய் பீகார் வேலையை பாருங்கள்
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
12-பிப்-202019:13:13 IST Report Abuse
vbs manian எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை.எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X