பிப்.15, 16ல் முதல்வர் கோப்பை போட்டிகள்

Added : பிப் 12, 2020
Advertisement

விருதுநகர்:விருதுநகரில் பிப். 15, 16ல் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.இங்குள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பிப்.15ல் ஆண், பெண் தடகள போட்டிகள், ஜூடோ, குத்துச்சண்டை, இறகுபந்து, கபடி, டென்னிஸ், கையுந்துபந்து, பிப். 16ல் ஆண், பெண்களுக்கான கூடைப்பந்து, ஹாக்கிபோட்டி விருதுநகர் கே.வி.எஸ்.,மேல்நிலை பள்ளியில் நடக்கிறது.
பங்கேற்போர் 2019 டிச. 31 உடன் 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். இருப்பிடம், வயது, பிறப்பு சான்று, பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், வங்கி கணக்கு முதல் பக்க நகல்,
குறைந்தது 5 ஆண்டுகள் வசித்து வருவதற்கான புகைப்படத்துடன் கூடிய சான்று சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில போட்டியிலும் பங்கேற்கலாம்.
www.sdat.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கண்ணன் கேட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X