பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரியில் ரேஞ்சர் முகாம்

Added : பிப் 12, 2020
Advertisement

சிவகாசி:சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி சாரணியர் இயக்கத்தின் சார்பில் மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை வளர்த்து எடுத்தல் என்ற நோக்கத்தில் ரேஞ்சர் முகாம் நடத்தப்பட்டது.
கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி தலைமை வகித்தார். பாடத்திட்ட ஆலோசகர் தெரசிட்டா மேரிசாந்தி, ஒருங்கிணைப்பாளர் விஜயபிரியா முன்னிலை வகித்தனர். யோகா பயிற்சியுடன் முகாம் துவங்கப்பட்டது. சூரிய நமஸ்காரம், படை நடை அணி வகுப்பு ஆகியவற்றை சாரணிய இயக்க மாணவிகள் நிகழ்த்தினர். எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் அருள் மோகன், விபத்தில் சிக்கியவர்களுக்கு வழங்கப்படும் முதலுதவி பற்றி விளக்கினார். பேரிடர்களில் சிக்கியவர்களை மீட்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. சாரணிய இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக்
குமார், இயக்க தலைவர் சுரேஷ்குமார், உதவி சாரணியர் இயக்க பயிற்சியாளர் சத்யாபாமா பயிற்சி அளித்தனர். திட்ட அலுவலர்கள் வள்ளிமயில், திட்ட உறுப்பினர்கள் தேவி, விக்னேஸ்வரி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X