கொரோனா வைரஸ் இனி ‛கோவிட் 19' என அழைக்கப்படும்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (22)
Advertisement

இந்த செய்தியை கேட்க

நியூயார்க் : சீனாவில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் உயிர்களை பலிகொண்ட கொரோனா வைரசிற்கு 'கோவிட் 19' (COVID-19) என உலக சுகாதார நிறுவனம் (WHO) பெயரிட்டுள்ளது.





சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைசிற்கு இதுவரை 1100 பேர் பலியாகி உள்ளனர். 42,708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரேயேசஸ் கூறும்போது, கொரோனா வைரசிற்கு கோவிட்-19 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பெயர் பூமியில் எந்தவொரு இடத்துக்கோ, மிருகத்துக்கோ, தனிநபருக்கோ, குழுவுக்கோ இதுவரை வைக்கப்படவில்லை. அதேவேளையில் உச்சரிக்கக் கூடியதாகவும், நோய்க்கு தொடர்புடையதாகவும் இந்தப் பெயர் உள்ளது என்றார்.





சி ஓ வி ஐ டீ என்ற இந்தப் பெயரில் சி ஓ என்பது கொரோனா என்ற வார்த்தையையும், வி ஐ என்பது வைரஸ் என்ற வார்த்தையையும், டீ என்பது டிசீஸ் எனப்படும் நோய் என்ற வார்த்தையையும் குறிப்பதாகவும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை தவறான பெயர்களைக் கொண்டு குறிப்பதைத் தடுக்கும் விதமாகவே இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவில் கொரோனா வைராசால் பாதிக்கப்பட்டுள்ளர்களில் 99 சதவீதம் பேர் அவசர நிலை சிகிச்சை கட்டத்தில் உள்ளனர். இது உலகின் மற்ற பகுதிகளுக்கும் மிகப் பெரிய அசு்சுறுத்தலாக விளங்குகிறது. கொரோனா, சார்ஸ் வகை வைரஸ் குடும்பத்தை சார்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
12-பிப்-202018:50:44 IST Report Abuse
Tamilan கோவிட் என்றால் வளர்ந்த நாடுகளின் செல்லப்பிள்ளை என்று அர்த்தமா ?
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-பிப்-202016:53:29 IST Report Abuse
Natarajan Ramanathan . இரண்டுமே அழிவுசக்தி.
Rate this:
Share this comment
Cancel
vaithiyalingam - Bengaluru,இந்தியா
12-பிப்-202015:18:37 IST Report Abuse
vaithiyalingam ஸ்டாலினை எப்படி நாம சொடலை, சுடலை, சுட்டாலின், இசுட்டாலின், கைப்புள்ள, தொளபதி என்று அன்போடு அழைக்கிறோமோ அது மாதிரி தான் இதுவும், அக்காங்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X