பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - ஈரோடு

Added : பிப் 12, 2020
Advertisement

சிகிச்சை பிரிவு பெயர் பலகை தேவை: ஈரோடு அரசு மருத்துவமனைக்கு, தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்குள்ள பழைய கட்டடத்தில், அவசர சிகிச்சை பிரிவு, தீப்புண் பிரிவு, எக்ஸ்ரே, ஸ்கேன் பிரிவு உள்பட பல்வேறு சிறப்பு பிரிவுகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன. அவற்றை, 13, 26 என எண்ணை கூறியும், மருத்துவ பயன்பாட்டு மொழியிலும் பணியாளர்கள், டாக்டர்கள் கூறுவதால், நோயாளிகள், உடன் வருவோர் சிரமப்படுகின்றனர்.

- எஸ்.ரஞ்சித்குமார், கருங்கல்பாளையம்.

ஈரோட்டில் ஒளிரும் ஸ்டிக்கர் அவசியம்: ஈரோடு மாநகரில் ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டப்பணி, பாதாள சாக்கடை பணி, பாதாள புதை மின் கேபிள் பதிப்பு பணி நடக்கிறது. இதற்காக பல இடங்களில் பிரமாண்ட குழி பறிப்பு, குழாய்கள் அடுக்கி வைத்திருத்தல், பெரிய மின் கேபிளை வீதிகளில் விட்டு செல்லுதல் என பல இடங்களில் ஆபத்தாக உள்ளது. இவ்விடங்களில் ஒளிரும் ஸ்டிக்கர், தடுப்பு கயிறு கட்டுதல், இரவில் சிவப்பு விளக்கு, எச்சரிக்கை பலகை போன்றவை எங்கும் வைக்கப்படவில்லை.

- பி.கனகராஜ், மாமரத்துபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X