தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம்: மாணவியர் விழிப்புணர்வு ஊர்வலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம்: மாணவியர் விழிப்புணர்வு ஊர்வலம்

Added : பிப் 12, 2020
Share

அந்தியூர்: தேசிய தொழுநோய் ஒழிப்புத்திட்டம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நேற்று அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தில், தோல் நோய் சம்பந்தமான குறைகள் இருப்பின், வீடு தேடி வரும் களப்பணியாளர்களிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த நோய்க்கு அரசின் சார்பில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது உள்ளிட்ட, பல்வேறு கோஷங்கள் எழுப்பியபடி மாணவியர் சென்றனர். அரசு மருத்துவமனை கார்னர் வரை சென்ற ஊர்வலம், மீண்டும் பள்ளி வந்தடைந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X