விலங்கியல் துறை விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விலங்கியல் துறை விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

Added : பிப் 12, 2020
Share
ஈரோடு: ஈரோடு கலை அறிவியல் கல்லூரி விலங்கியல் துறை சார்பில், ஆண்டுதோறும் விலங்கியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று விலங்கியல் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில். ஈரோடு எஸ்.கே.சி., சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த, 80 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். துறை தலைவர் சித்ரா மற்றும் போரசிரியர்கள், விலங்குகள், அவை வாழ்விடம், அவற்றால்

ஈரோடு: ஈரோடு கலை அறிவியல் கல்லூரி விலங்கியல் துறை சார்பில், ஆண்டுதோறும் விலங்கியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று விலங்கியல் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில். ஈரோடு எஸ்.கே.சி., சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த, 80 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். துறை தலைவர் சித்ரா மற்றும் போரசிரியர்கள், விலங்குகள், அவை வாழ்விடம், அவற்றால் ஏற்படும் நன்மை மற்றும் ஆய்வகத்தில் உள்ள கருவிகள். அதன் பயன்பாடு குறித்து விளக்கினர். தொடர்ந்து பேராசிரியர் ஹரிசந்திரன் 'மந்திரமா, தந்திரமா' என்ற நிகழ்ச்சியில், ஈரத்துணியின் உதவியுடன் தலையில் எரியும் நெருப்பில், பால் காய வைத்தும், அது சூடாகும் விதம், தலை ஏன் சுடவில்லை, வெப்பநிலை உள்ளிட்டவை குறித்து விளக்கினார். ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X