பொது செய்தி

தமிழ்நாடு

சாக்கடையை தூர்வார தயக்கம்: மக்களே களமிறங்கியதால் பரபரப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

கோபி: துப்புரவு பணியாளர்கள், தூர்வார ஆர்வம் காட்டாததால், பொதுமக்களே களமிறங்கி சாக்கடையை சுத்தம் செய்ததால், கோபி அருகே பரபரப்பு ஏற்பட்டது.
கோபி நகராட்சிக்கு உட்பட்ட, நான்காம் வார்டு, ராமானந்தா நகரில் 15 வீடுகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் கூலித்தொழிலாளிகள் வசிக்கின்றனர். வீதியின் ஓரத்தில் செல்லும் சாக்கடையை, பல மாதங்களாக தூர்வாராததால், அதன் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுவது வாடிக்கையாக இருந்தது. இதுகுறித்து, அப்பகுதியினர் பல முறை நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், நடவடிக்கை இல்லை. இதனால், ஆத்திரமடைந்த மக்கள், தாங்களே சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் நேற்று மதியம், 12:00 மணிக்கு களமிறங்கினர். இதுகுறித்து ராமானந்தா நகர் மக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதி சாக்கடை, பல மாதங்களாக தூர்வாரப்படவில்லை. இதனால், துர்நாற்றம் மற்றும் கொசுக்கடிக்கு பஞ்சமில்லை. பல முறை புகார் தெரிவித்தும், துப்புரவு பணியாளர்கள் கண்டு கொள்ளவில்லை. அதனால், நாங்களே சாக்கடையை சுத்தம் செய்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X