பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துறை ஊழியர்களுக்கு டிரோன் மூலம் கண்காணிக்கும் பயிற்சி

Added : பிப் 12, 2020
Advertisement

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியை, டிரோன் மூலம் கண்காணிக்கும் பயிற்சி நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், கடம்பூர் உள்பட ஒன்பது வனச்சரகங்கள் உள்ளன. இங்கு மான், யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட, பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதி, நீண்ட தொலைவு இருப்பதோடு, பல இடங்களில் வன ஊழியர்கள் உள்ளே நுழைய முடியாதபடி உள்ளது. இதை பயன்படுத்தி, மர்ம நபர்கள் வனப்பகுதிக்குள் புகுந்து, வேட்டை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் வனத்துறை சார்பில், அடர்ந்த வனப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், விலங்குகளின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, நீர்நிலைகள், வனத்தீயை கண்டறிதல் மற்றும் விலங்குகள் உயிரிழப்புகளை தெரிந்து கொள்வது குறித்து டிரோன் எனப்படும், ரிமோட் மூலம் இயங்கும் சிறிய ஹெலிகாப்டர் கேமராக்களை கொண்டு கண்காணித்து, படம் மற்றும் வீடியோக்கள் எடுப்பது எப்படி என, வனத்துறை ஊழியர்களுக்கு, பண்ணாரி வன உயிரின பூங்காவில் மூன்று நாட்கள் பயிற்சி துவங்கியுள்ளது. இந்த கேமரா, 2 கி.மீ., தூரம் வரை, 20 நிமிடம் பயணிக்கக்கூடியது. முதற்கட்டமாக சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்பாளையம் உள்ளிட்ட வனச்சரகத்திலும், அதன்பின் ஆசனூர், தாளவாடி, கடம்பூர் வனச்சரகத்திலும் பயிற்சி அளிக்கப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X