பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.35 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

Added : பிப் 12, 2020
Advertisement

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. 2,251 கிலோ எடையுள்ள தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். ஒரு டன் தேங்காய் அதிகபட்சமாக, 39 ஆயிரத்து, 50 ரூபாய், குறைந்தபட்சமாக, 19 ஆயிரத்து, 50 ரூபாய், சராசரியாக, 35 ஆயிரத்து, 100 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 61 ஆயிரத்து, 701, ரூபாய்க்கு தேங்காய் ஏலம் போனது. மேலும், 846 மூட்டைகளில், 38 ஆயிரத்து, 783 கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு குவிண்டால் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக, 10 ஆயிரத்து, 783 ரூபாய், குறைந்தபட்சமாக, 9,875 ரூபாய், சராசரியாக, 10 ஆயிரத்து, 425 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 35 லட்சத்து, 9,469 ரூபாய்க்கு ஏலம் போனது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X