பொது செய்தி

தமிழ்நாடு

முருகன் கோவிலில் இன்று தைப்பூச மகா தரிசனம்

Added : பிப் 12, 2020
Advertisement

சென்னிமலை: சென்னிமலை, முருகன்கோவில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதரிசனம் இன்று இரவு நடக்கிறது.
சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழா கடந்த, 31ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் பல்லக்கு சேவை, மயில் வாகன காட்சி, யானை வாகன காட்சி, பஞ்சமூர்த்தி புறப்பாடு, திருத்தேரோட்டம், குதிரை வாகன காட்சி, பரிவேட்டை, தெப்போற்சவம் என தொடர்ந்து விழா நடந்தது. முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமார சாமிக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது, டன் கணக்கில் மலர்களால் அபிஷேகம் செய்யப்படும். இரவு, 7:40 மணிக்கு நடராஜர், சுப்பிரமணியர் வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா நடக்கும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய தரிசனம் செய்வர். 9:00 மணிக்கு நாதஸ்வர தவிலிசை கச்சேரியுடன், நான்கு ராஜா வீதிகளிலும் சுவாமிகள் வலம் வந்து அதிகாலையில் கைலாசநாதர் கோவிலுக்குள் சென்றடையும். நாளை மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், 15 நாள் தேர்த்திருவிழா நிறைவுக்கு வருகிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் நந்தகுமார், செயல் அலுவலர் அருள்குமார் மற்றும் பணியாளர்கள், அர்ச்சகர்கள் உட்பட ஊர் பிரமுகர்கள் செய்துள்ளனர். பெருந்துறை டி.எஸ்.பி., ராஜகுமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலை, 4:00 மணிக்கு மேல் சென்னிமலை டவுன் பகுதிக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டது. ஈரோடு, பெருந்துறை மார்க்கமாக செல்லும் பஸ்களுக்கு, பிராட்டியம்மன் கோவில் அருகில் தற்காலிக பஸ்ஸ்டாண்டும், அரச்சலூர், கரூர் மார்க்கமாக செல்லும் பஸ்களுக்கு அரச்சலூர் ரோட்டிலும், ஊத்துக்குளி மார்க்க பஸ்களுக்கு மேலப்பாளையத்திலும் தற்காலிக பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்கப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X