சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குப்பைமேடாகும் குடியிருப்பு பகுதி: மாநகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

Added : பிப் 12, 2020
Share
Advertisement

ஈரோடு: குடியிருப்பு பகுதியில், குப்பை கொட்டுவதால் பொது சுகாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, பொதுமக்கள் மாநகராட்சி வாகனத்தை சிறை பிடித்தனர். ஈரோடு, வீரப்பன் சத்திரம் சக்தி நகர் ஐயர்காடு பகுதியை சேர்ந்த சந்திரன் தலைமையில் பொதுமக்கள், அங்கு குப்பையை கொட்ட வந்த மாநகராட்சி பேட்டரி வாகனத்தை, நேற்று மதியம், 12:20 மணிக்கு சிறை பிடித்தனர். ஐந்து நிமிடம், மாநகராட்சியை கண்டித்து கோஷம் எழுப்பினர். குப்பை முற்றிலுமாக அகற்றப்படும் என, மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்ததால், மக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதியில், 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், பள்ளிகள், விசைத்தறி கூடங்கள் உள்ளன. சாலையோரம் எட்டு குப்பை தொட்டிகளை, மாநகராட்சி நிர்வாகம் ஆறு மாதங்களுக்கு முன் வைத்தது. பிற பகுதி குப்பை, கோழி, ஆட்டிறைச்சி ஆகியவையும் கொட்டுகின்றனர். அனைத்து பகுதி குப்பையை, இங்கு கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X