சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்து முன்னணி பிரமுகர் காருக்கு தீவைப்பு

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (1)
Advertisement
இந்து முன்னணி பிரமுகர் காருக்கு தீவைப்பு

திருப்பூர்: திருப்பூரில் ஹிந்து முன்னணி அமைப்பு நிர்வாகி ஒருவரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர், கொங்கு மெயின்ரோடு பகுதியில் வசிப்பவர் மோகனசுந்தரம். இவர் ஹிந்து முன்னணி அமைப்பின் கோட்ட செயலாளராக உள்ளார். இவர், தனது காரை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். அதிகாலை 4 மணியளவில், கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மோகன சுந்தரம் வெளியில் வந்து பார்த்தபோது யாரும் இல்லை. கார் எரிந்து பலத்த சேதமடைந்தது. தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் ஹிந்து முன்னணி பிரமுகர்கள் மோகன சுந்தரம் வீடு முன்பு திரண்டனர். தகவல் அறிந்த திருப்பூர் போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் நேரில் வந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நிர்வாகிகள், ஹிந்து அமைப்பின் நிர்வாகிகள் மீது குறிவைத்து தாக்கப்படுவது அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.இதனையடுத்து, அந்த பகுதியில் மற்றும் பக்கத்து வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, மங்கி குல்லா அணிந்து வந்த 4 பேர், மரத்தில் பின்னால் மறைந்து நின்றதும், தொடர்ந்து காரில் ஏதோ ஒன்றை தடவி தீவைத்து தப்பி சென்றதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


மோகன சுந்தரம் கார் தீவைத்து எரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஹிந்து முன்னணி நிர்வாகிகள், நாளை கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இன்று ஒரு சில இடங்களில் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடக்கிறது. ஒரு சில பஸ்கள் மீது கல்வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-பிப்-202016:32:04 IST Report Abuse
Malick Raja அறிவார்ந்த சமூகமாக இருந்தால் தானே குற்றவாளிகள் கண்டுபிடிப்ப நினைப்பார்கள் ...அதெப்படி முடியும் தீவைக்க .. இன்சூரன்ஸ் காரர்கள் பிரமாதமாக கண்டுபிடித்துவிடுவார்கள் .. காரணம் பணம் கொடுக்க வேண்டுமல்லவா ? அதற்காகவாவது கண்டுபிடித்துவிடவேண்டுமல்லவா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X