சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சரணடைந்தவரிடம் போலீஸ் விசாரிக்க முடிவு

Added : பிப் 12, 2020
Advertisement

அந்தியூர்: அந்தியூர் யூனியன், சங்கராபாளையம் பஞ்., தலைவர் சின்னதங்கம், 49. இவர் கடந்த, 3ல், பட்டப்பகலில் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார். காரில் தப்பிய சரவணன், பாலமுருகன், ராஜேஷ் ஆகியோரை கவுந்தப்பாடி அருகே போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதில் தப்பியோடிய சிவா, முத்துமாரி ஆகியோர் ஆப்பக்கூடல் பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சங்கராபாளையத்தை சேர்ந்த அரவிந்த் என்பவரின் தந்தையின் கொலைக்கு, பழிக்கு பழி வாங்குவதற்காக சின்னதங்கத்தை கொன்றதாகவும், மேலும் அரவிந்த், 26, ஏவியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், அரவிந்த் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த, 6 ல், சரணடைந்தார். மேலும் அவரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து, அவரை பவானி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அரவிந்தை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி வழங்கியவுடன், அரவிந்தை போலீசார் வெள்ளித்திருப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X