சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தங்கைக்கு 'லவ் டார்ச்சர்': தட்டிக்கேட்ட அண்ணன் மீது தாக்குதல்

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (1)
Advertisement

ஈரோடு: தங்கைக்கு, 'லவ் டார்ச்சர்' கொடுத்த சக பள்ளி மாணவர்களை தட்டிக்கேட்ட அண்ணனை சரமாரியாக தாக்கிய, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, கொல்லம்பாளையம் தங்கமணி வீதியை சேர்ந்தவர் சந்துரு, 19. இவரது தங்கை ரயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவருக்கு, பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர், 'லவ் டார்ச்சர்' கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி, அவரது அண்ணன் சந்துருவிடம் தெரிவித்தார். இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு, லவ் டார்ச்சர் கொடுத்த மாணவனை சந்துரு எச்சரித்துள்ளார். இந்நிலையில், சந்துருவும், அவரது தங்கையும் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் ஹவுசிங் யூனிட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சந்துருவின் தங்கையுடன் படிக்கும் மாணவர்கள் உள்பட ஏழு பேர், இருவரையும் வழிமறித்து தாக்கி விட்டு தப்பினர். இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சூரம்பட்டி போலீசார், விசாரணை நடத்தி மாணவர்கள் உள்பட ஆறு பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-பிப்-202016:42:41 IST Report Abuse
Ram Pollachi தம்பி அவளுடைய அப்பா ஜெயிலில் இருந்து வரவில்லை. நேற்று தான் சீனாவிலிருந்து வந்திருக்கிறார் சீதனமாக கோவிட் 2019 தருவார் வாங்கிக்கோ!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X