சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பெண் ஊழியரை மிரட்டிய வாலிபர் கைது

Added : பிப் 12, 2020
Advertisement

சென்னிமலை: சென்னிமலையில், அரசு பெண் ஊழியரை பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். சென்னிமலை அருகே, எக்கட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் பூங்கொடி, 28; இவர், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில், அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர், உள்ளாட்சி தேர்தலின் போது, வேட்பாளர் ஒருவருக்கு ஓட்டு சேகரித்ததாக கூறி, சென்னிமலை அருகே தட்டாங்காடு பிரிவை சேர்ந்த வெள்ளியங்கிரி, 26, என்பவர் வாட்ஸ்ஆப்பில் செய்தி வெளியிட்டுள்ளார். அதை நீக்கக்கோரி, வெள்ளியங்கிரியிடம் பூங்கொடி கேட்டார். இதையடுத்து, நீக்கியதுடன் மேலும் செய்தி போடாமல் இருக்க, பூங்கொடியை மிரட்டி வெள்ளியங்கிரி, 1,000 ரூபாய் பெற்றுள்ளார். மீண்டும் பூங்கொடியை மொபைல்போனில் தொடர்பு கொண்ட வெள்ளியங்கிரி, உங்கள் ஊராட்சியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும், எனக்கு தெரிவிக்க வேண்டும்; மாதந்தோறும், 2,000 ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த, 2ல் கணவருடன் பூங்கொடி மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பசுவபட்டி பிரிவு அருகே, அவர்களை வழி மறித்து, ஏன் எனக்கு செய்தி தரவில்லை; உங்களை பற்றி வாட்ஸ்ஆப்பில் போட்டு அவமானப்படுத்தி விடுவேன் என, வெள்ளியங்கிரி மிரட்டியுள்ளார். இதுகுறித்து, சென்னிமலை போலீசில் பூங்கொடி கொடுத்த புகார்படி, எஸ்.ஐ., உமாபதி விசாரணை நடத்தி, வெள்ளியங்கிரியை கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X