சம்பவம் செய்தி

தமிழ்நாடு

70 இருசக்கர வாகனங்கள், 2 கார்களை ரூ.1.50 லட்சத்துக்கு விற்ற போலீசார்

Added : பிப் 12, 2020
Share
Advertisement

திருச்சி: திருச்சி அருகே, வாகன சோதனையில் பிடிட்ட, 70 இருசக்கர வாகனங்கள், இரண்டு கார்களை, 1.50 லட்சம் ரூபாய்க்கு, போலீசார் விற்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார் நடத்திய, வாகன சோதனையில், திருட்டு, மதுபானம் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில், ஏராளமான இருசக்கர வாகனங்கள், கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை, காவல் நிலையத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் போலீசார், 70 இருசக்கர வாகனங்கள், 'மாருதி ஸ்விப்ட்' உள்பட, இரு கார்களையும், எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல், தனியாருக்கு விற்றுள்ளனர். அதுவும், 1.50 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே, அவற்றை விற்றுள்ளதால், போலீசார் ஊழலில் ஈடுபட்டுள்ளனரோ என, மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: போலீசாரால் பிடிபட்ட வாகனங்கள் அனைத்தும், முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏலம் விடப்படும். ஆனால், இங்கு நீண்டகாலமாக கேட்பாரற்று கிடந்த, 70 இருசக்கர வாகனங்கள், இரு கார்களையும், 1.50 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே விற்றுள்ளனர். அவற்றின் மதிப்பு, 15 லட்சத்துக்கு மேல் இருக்கும். இதில், மோசடி நடந்துள்ளது. இவ்விஷயத்தில், உயர் போலீஸ் அதிகாரிகள் தலையிட்டு, தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X