சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சியில் 2 குழந்தை விற்பனை: பெற்றோர் உட்பட 8 பேர் கைது

Added : பிப் 12, 2020
Advertisement

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை, சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக, எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி, திருவெறும்பூர் பகுதியில், குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.பி., ஜியாவுல் ஹக் உத்தரவுப்படி, போலீசார், குழந்தைகள் பாதுகாப்பு குழு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவினர் விசாரணை நடத்தினர். இதில், திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து, 102 நாட்களான ஆண் குழந்தையும், 25 நாட்களான ஆண் குழந்தையும் காணாமல் போனது தெரிந்தது. அந்த குழந்தைகள், திருவெறும்பூர் மற்றும் குவளக்குடி பகுதியில் விற்பனை செய்யப்பட்டிருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, சிறப்பு குழுவினர் திருவெறும்பூர் சென்று, கோவிந்தன், 32, அஸ்வினி, 27, தம்பதியிடம் விசாரித்தனர். அப்போது, மூன்று மாதங்களுக்கு முன், காமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவரின் ஆண் குழந்தையை, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது தெரிந்தது. இதேபோல், குவளக்குடியை சேர்ந்த தர்மராஜ் - ராணி தம்பதியின் ஆண் குழந்தையை, துறையூர் அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த குமார் - சாரதா தம்பதி வாங்கியதும் தெரிந்தது. இந்த குழந்தைகள் விற்பனையில், லூர்து மேரி, 52, வெண்ணிலா, 42, ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டுள்ளனர். இதையடுத்து, அஸ்வினி, புவனேஸ்வரி, தர்மராஜ், ராணி, குமார், சாரதா மற்றும் புரோக்கர்கள் வெண்ணிலா, லூர்துமேரி ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்த சிறப்பு குழுவினர், வெண்ணிலாவிடம் இருந்து, 82 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட, இரண்டு குழந்தைகளையும் மீட்டு, குழந்தைகள் நல இல்லத்தில் சேர்த்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X