சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புகைப்படத்தை வைத்து மிரட்டல்: பெண் புகாரில் கள்ளக்காதலன் கைது

Added : பிப் 12, 2020
Share
Advertisement

திருச்சி: சேர்ந்து எடுத்த புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என்று மிரட்டிய கள்ளக்காதலனை, பெண் புகாரில் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, ஸ்ரீரங்கம் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ?ஹமலதா, 27. இவரது கணவரின் நண்பர் கீதாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 33. ஹேமலதாவுக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் சுய உதவிக்குழுவில் கடன் வாங்குவதற்காக, இருவரும் கணவன், மனைவி போல் நின்று போட்டோ எடுத்துள்ளனர். இந்த போட்டோவை சமூக வலைதளங்களில் பரவ விட்டு விடுவேன் என்று, சமீப காலமாக ஹேமலதாவை, கிருஷ்ணமூர்த்தி மிரட்டி வந்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஹேமலதா, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கிருஷ்ணமூர்த்தியை நேற்று முன்தினம் இரவு கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X